Dec 16, 2024

கணவருக்குப்பின் பிரச்சனைகளின்றி மனைவி குடும்ப ஓய்வூதியம் பெறுவது தொடர்பாக

கணவருக்குப்பின் பிரச்சனைகளின்றி மனைவி குடும்ப ஓய்வூதியம் பெற.
முதலில் மனைவியின் பெயர் கனவரின் PPO வில் குறிப்பிடப் பட்டிருக்க (ஜாயின்ட் நோடிபிகேசன்), வேண்டும்.
அடுத்து, மனைவியின் பெயரும் , பிறந்த தேதியும் கீழ் காணும் ஆவணங்களில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
1. PPO,    2.  மனைவியின் ஆதார் கார்டு,  3. மனைவியின் பான் கார்டு,
4.  வங்கி ஜாயின்ட் அக்கவுன்ட் 
தனக்குப்பின், தன் மனைவியின் பெயரும் பிறந்த தேதியும் தம் PPO வில்  குறிப்பிடப் பட்டிருந்து (ஜாயின்ட் நோடிபிகேசன்), வங்கி கணக்கில் பதியப்பட்ட பெயர்,, பிறந்த தேதியோடு ஒத்துப் போனால்தான் தனக்குப்பின் தன் மனைவிக்கு குடும்ப ஓய்வூதயம் கிடைக்கும் 
கணவரின் PPO வில் மனைவியின் பெயர், பிறந்த தேதியும் ஜாயின்ட் நோடிபிகேசன் செய்யப்பட்டிருந்தால், மனைவியின் பெயரில் வேறு குடும்ப ஓய்வூதிய PPO அவசியமில்லை. 
கணவரின் இறப்புச் சான்றோடு, தம் ஆதார் மற்றும் பான் கார்டை வங்கியில் ஒரு மனுவுடன் சமர்பித்தால் போதும்.  வங்கியின் சில சம்பிரதாயங்கள் முடிந்து ஓரிரு மாதத்திற்குள் குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்.
SPARSH-ல், வங்கி கணக்கு மாற்றப்பட்டிருந்தால், SPARSH-ல் உள்ளே நுழையாமலேயே, SPARSH மெனுவில் SERVICES  என்பதை கிளிக் செய்து, அதன் கீழ் வரும்  “Death Report/ Start Family Pension”  என்பதனை கிளிக் செய்து கேட்கும் விபரங்களை பதிவு செய்து கணவரின் இறப்புச் சான்றை மட்டும் பதிவேற்றம் செய்யவேண்டும்.  
மனைவியின் ஆதார் எண்ணை பதிவிடும்போது அதில் ஒத்துப்போகாமல் ஆதாரை பதிவேற்றம் செய்ய SPARSH கேட்கலாம். 
எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில், தங்களுக்கு டிராக்கர் எண் தரப்படும்.  ஓரிரு வாரங்களில் இந்த எண்ணையும் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணையும் பதிந்து, நிலைமையை தெறிந்துகொள்ளலாம்,  இடையில், தங்களுக்கு SPARSH ல் நுழைய  புதிய பாஸ்வோர்ட் மற்றும் PPO எண் தரப்படும். இது தங்கள் கணவரின் அதே PPO எண்தான்.  கரிகண்டம் எண் மட்டும் மாறும்
SPARSH-ல் நுழைய  PPO  எண்ணோடு 02 மட்டும் சேர்க்க, அதுவே தங்கள் யூசர் ஐடி ஆகும்.  கொடுக்கப்பட்ட பாஸ்வோர்டு ஒருமுறை மட்டும் உள்ளே நுழைய பயன்படும்.  உள்ளே நுழையும் போதே புதிய பாஸ்வோர்டு உருவாக்க SPARSH கோரும்  புதிய பாஸ்வோர்டு உருவாக்கியதும் SPARSH-ல் இருந்து தங்களை வெளியேற்றிவிடும்.  பின்னர் மீண்டும் உருவாக்கிய புதிய பாஸ்வோர்டு பயன்படுத்தி உள்ளே நுழைய வேண்டும்.

மனைவியின் பெயர் கனவரின் PPO வில் குறிப்பிடப்படாமல் (ஜாயின்ட் நோடிபிகேசன்), செய்யப்படாமல் இருக்கும் பட்சத்தில் உடனடியாக குடும்ப ஓய்வூதியம் கிடைக்காது.
திருமண பதிவுச் சான்று, திருமண பத்திரிக்கை, பெயர், பிறந்த தேதி, இருப்பிடம், மற்றும் திருமணம் நடந்த விபரம் அடங்கிய ஒரு அப்பிதவித், (வாக்குமூலம்), மற்றும் இரண்டு தேசிய பத்திரிக்கைகளில் விளம்பரம் இவற்றோடு, தம் ஆதார், பான் கார்டு நகல்களுடன், ஒரு ஓய்வூதிய கோரிக்கை மனுவுடன் ADE (ZSB)  அலுவலகத்தில் சமர்பித்து, அவர்கள் சரி பார்த்து தங்கள் ரிகார்டு ஆபீசுக்கு அனுப்பி, எல்லாம் சரியாக உள்ள பட்சத்தில் ரிகார்டு ஆபீஸ் PCDA(P) அலஹாபாத்திற்கு தேவையான விபரங்களை அனுப்பி அவர்கள் சரி பார்த்து, சரியாக இருக்கும் பட்சத்தில் குடும்ப ஓய்வூதியம் பெற, கரிகண்டம் PPO அனுப்புவார்கள். அதன் பின்னர்தான் வங்கியோ அல்லது SPARSH, குடும்ப ஓய்வூதியம் தரும்.  இதற்கு வருட காலமும் ஆகலாம்.
எனவே, இத் துயரங்களை தம் குடும்பத்தாருக்கு கொடுக்காமல், தாம் உள்ளபோதே கண்டிப்பாகச் செய்யவேண்டியவை
1. தன் PPO வில் மனைவியின் சரியான பெயரும், பிறந்த தேதியும் ஜாயின்ட் நோடிபிகேசன் செய்துள்ளதை சரிபார்த்து, இல்லாத பட்சத்தில் ஆவன செய்து அதை முறைப்படுத்த வேண்டும்.
குறிப்பாக 1986 க்கு முன் ஓய்வு பெற்ற மு.ரா சகோதரர்கள் இதை கண்டிப்பாகச் செய்யவேண்டும்.  இல்லையேல் பாவம் மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் கஷ்டப்பட வேண்டும்

மனைவியின் பெயர் கனவரின் PPO வில் குறிப்பிடப்பட்டும் (ஜாயின்ட் நோடிபிகேசன்), செய்யப்பட்டும், பெயர், பிறந்த தேதி, அதார் மற்றும் பான் கார்டுடன் ஒத்துப்போகமல் மாறி இருந்தால், உடனடியாக திருத்தம் செய்துகொள்ள வேண்டும்.  அதற்கு  
முதலில் ஆதார் மற்றும் பான் கார்டுகளில் மனைவியின் பெயர், பிறந்த தேதி சரியாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்
இரண்டாவதாக பெயர், திருத்தம், பிறந்த தேதி திருத்தம், இருப்பிடம் முகவரி ஆகிய, விபரம் அடங்கிய ஒரு அப்பிதவித், (வாக்குமூலம்), மற்றும் 
இரண்டு தேசிய பத்திரிக்கைகளில் பெயர் /பிறந்த தேதி திருத்த விளம்பரம் இவற்றோடு, 
மனைவியின் ஆதார், பான் கார்டு நகல்களுடன், 
பெயர் /பிறந்த தேதி திருத்த கோரிக்கை மனுவுடன் 
ADE (ZSB)  அலுவலகத்தில் சமர்பித்து, அவர்கள் சரி பார்த்து தங்கள் ரிகார்டு ஆபீசுக்கு அனுப்பி, எல்லாம் சரியாக உள்ள பட்சத்தில் ரிகார்டு ஆபீஸ் Part-II  ஆர்டர் பப்லிஸ் செய்து அந்த காப்பியுடன் PCDA(P) அலஹாபாத்திற்கு தேவையான விபரங்களை அனுப்பி அவர்கள் சரி பார்த்து, சரியாக இருக்கும் பட்சத்தில் குடும்ப ஓய்வூதியம் பெற, (ஜாயின்ட் நோடிபிகேசன்) கரிகண்டம் PPO அனுப்புவார்கள். இது சராசரியாக 6 மாதகாலம் ஆகலாம்.
மற்றும் சில….
ஓய்வூதிய வங்கி கணக்கு கண்டிப்பாக ஜாயின்ட் அக்கவுன்டாக இருக்க வேண்டும்.  காரணம்
அப்போதுதான் ஜாயின்ட் அக்கவுன்ட்டில் உள்ளவர்தான் தங்கள் மனைவி என்பது உறுதியாகும்.  மற்றவர் கோரமுடியாது.
நமக்குப்பின் குடும்ப ஓய்வூதியம் அதே கணக்கில் மனைவி தொடர்ந்து பெறலாம்.
நம் கணக்கில் நாம் விட்டுப்போகும் தொகை, நிலுவை ஓய்வூதியம் போன்றவை பிரச்சனைகளின்றி மனைவியிடம் சேரும்.
தங்கள் PPO க்கள், டிச்சார்ஜ் புத்தகம், தங்கள் ஐடி கார்டு முதலானவை பத்திரமாக் ஓரிடத்தில் மனைவிக்கு தெறியும் வகையில் வைக்கவும்,  சில போட்டோ காப்பி (நகல்கள்) எடுத்து மற்றோரிடத்தில் வைக்கவும்
SPARSH-சில் கணக்கு மாற்றப்பட்டிருந்தால் தங்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வோர்ட்  மனைவிக்கும் தெறியும்படி வைக்கவும்
தொடரும்.இப்படிக்கு உங்கள் ஆவடி முருகன்

No comments:

Post a Comment

Indian Military Veterans Viewers, ..

Each of you is part of the Indian Military Veterans message.
We kindly request you to make healthy use of this section which welcomes the freedom of expression of the readers.

Note:

1. The comments posted here are the readers' own comments. Veterans news is not responsible for this in any way.
2. The Academic Committee has the full right to reject, reduce or censor opinion.
3. Personal attacks, rude words, comments that are not relevant to the work will be removed
4. We kindly ask you to post a comment using their name and the correct email address.

- INDIAN MILITARY VETERANS- ADMIN