ஜனவரி 01,2012,13:19 IST
புதிய அனல் மின் நிலையம் : மேலும் ஒரு அறிவிப்பில் ஜெ., கூறியிருப்பதாவது; எண்ணூரில் ஒரு புதிய அனல் மின் நிலையம் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 90 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதன் மூலம் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். வரும் 2015 ம் ஆண்டுக்குள் இது நிறைவேற்றப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ள உத்தரவில் கூறியுள்ளார்.
Dinamalar News
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனசை முதல்வர் ஜெ., அறிவித்துள்ளார். இதன் மூலம் அரசு ஊழியர்கள் பல லட்சம் பேர் பயனடைவர். மேலும் அரசுக்கு ரூ, 264 கோடி செலவாகும். முதல்வரின் இந்த அறிவிப்பை அரசு ஊழியர்சங்கத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். ஆண்டுதோறும் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு பொங்கல் போனசை அறிவித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான போனசை முதல்வர் ஜெ. இன்று அறிவித்து வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழக அரசின் ஒளிவு மறைவு அற்ற அரசின் பொறுப்புள்ள அரசின் நிர்வாகம் சிறப்பாக அமைந்திடவும், அரசு கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அரசக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்கும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்படுகிறது. இதன்படி சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக ரூ.3 ஆயிரமம்உச்ச வரம்புக்குட்பட்டு போனஸ் வழங்கிடவும், ஏ. மற்றும் பி., பிரிவு ஊழியர்களுக்கு ஆயிரம் மிகைத்தொகையாகவும், ஓய்வூதியம் , குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முன்னாள் கிராம நிர்வாக ஊழியர்களுக்கு ரூ. 500 போனசாகவும், 240 நாட்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு ஆயிரம் சிறப்பு ஊதியமாகவும் வழங்கப்படும்.இந்த போனஸ் மாத ஊதியம் அடிப்படையில் நிலையான ஊதியம் பெறும் ஊழியர்கள், முழுநேர, மற்றும் பகுதிநேர ஊழியர்கள், தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்றுவோர்
சிறப்பு கால முறை ஊதிய அடிப்படையில் ஊதியம் பெறும்சத்துணவு ஊழியர்கள் , குறு அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், பஞ்சாயத்து ஊழியர்கள், உள்ளாட்சி மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவன அலுவலர்கள், ஆசிரியர்கள், பல்கலை., மானியக்குழு, அகில இந்திய தொழில் நுட்ப கலைக்குழு, அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக சம்பள விகிதம், அகில இந்திய பணி விதியின் கீழ் பணியாற்றும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர்கூறியுள்ளார். புதிய அனல் மின் நிலையம் : மேலும் ஒரு அறிவிப்பில் ஜெ., கூறியிருப்பதாவது; எண்ணூரில் ஒரு புதிய அனல் மின் நிலையம் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 90 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதன் மூலம் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். வரும் 2015 ம் ஆண்டுக்குள் இது நிறைவேற்றப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ள உத்தரவில் கூறியுள்ளார்.
Dinamalar News
No comments:
Post a Comment
Indian Military Veterans Viewers, ..
Each of you is part of the Indian Military Veterans message.
We kindly request you to make healthy use of this section which welcomes the freedom of expression of the readers.
Note:
1. The comments posted here are the readers' own comments. Veterans news is not responsible for this in any way.
2. The Academic Committee has the full right to reject, reduce or censor opinion.
3. Personal attacks, rude words, comments that are not relevant to the work will be removed
4. We kindly ask you to post a comment using their name and the correct email address.
- INDIAN MILITARY VETERANS- ADMIN