சித்த மருத்துவ கல்லூரி, பாளையங்கோட்டை பெண்கள் விடுதி நீண்ட கால பிரச்சனைகள்.
1 . பட்டபடிப்பு ,பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விடுதி வசதி இல்லை.
2 . ஒரே அறையில் 6 ,7 மாணவிகள் தங்க வேண்டியுள்ளது. இதனால் இட நெருக்கடியும், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
3 . டெங்கு ,குரோனா போன்ற வைரஸ் காய்ச்சல் ஏற்படும்போது மிக எளிதாக அனைவருக்கும் நோய்த் தொற்று ஏற்படுகிறது.
4 . அன்றாட தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் மிக சிரமப்பட வேண்டியுள்ளது, உணவு அருந்துவதற்கு கூட இடவசதி இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
5 . விடுதிக் கட்டிடங்கள் ஆங்காங்கே இடிந்து விழுகின்றன, இதனால் அச்சத்துடன் இருக்க வேண்டியுள்ளது.
6 . அடிக்கடி அடையாளம் தெரியாத வெளிநபர்கள் விடுதிக்குள் வந்து செல்கின்றனர் இதனால் எங்களுக்கும் எங்கள் பொருட்களுக்கும் உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.
7 . பத்தாண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு ஆண்கள் விடுதி இல்லாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
8 . வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் போதே மேற்கூரை இடிந்து விழுகின்றது.
9 . கல்லூரி வளாகத்தில் ஒரு கழிப்பிட வசதி கூட இல்லாமல் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என எல்லோரும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறோம்.
10 . கல்லூரியில் போதுமான அடிப்படை வசதி இல்லாததால் இந்த வருடத்துக்கான பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிப்பதற்கான அனுமதி கிடைப்பதற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேற்கண்ட பிரச்சனைகள் பல வருடங்களாகவே தொடர்கின்றது, அவ்வப்போது வழங்கப்படுகின்ற தற்காலிக தீர்வு எந்தவித பயனையும் அளிப்பதில்லை எனவே எங்களுக்கு நிரந்தர தீர்வே வேண்டும்.
கோரிக்கைகள்;
1 . மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி அவர்கள் நேரில் வந்து இதனை ஆய்வு செய்ய வேண்டும், 60 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள மாணவர்களின் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு தர வேண்டும்.
2 . மாண்புமிகு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் நேரில் வந்து எங்கள் கல்லூரியின் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு நல்ல தீர்வை தரவேண்டும்.
No comments:
Post a Comment
Indian Military Veterans Viewers, ..
Each of you is part of the Indian Military Veterans message.
We kindly request you to make healthy use of this section which welcomes the freedom of expression of the readers.
Note:
1. The comments posted here are the readers' own comments. Veterans news is not responsible for this in any way.
2. The Academic Committee has the full right to reject, reduce or censor opinion.
3. Personal attacks, rude words, comments that are not relevant to the work will be removed
4. We kindly ask you to post a comment using their name and the correct email address.
- INDIAN MILITARY VETERANS- ADMIN